வெற்றிமாறன் வெளியிட்ட ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் | endravathu oru naal first look released

371

விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

‘ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் விதார்த். பெயரிடப்படாத சில படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த் நடித்து வந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘என்றாவது ஒரு நாள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

மனித குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடப்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களைக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் வெற்றி துரைசாமி.

விதார்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘தி தியேட்டர் பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.thanks