விஜய்யைச் சந்தித்த வருண் சக்ரவர்த்தி: வைரலாகும் புகைப்படம் | varun chakaravarthy met vijay

345

விஜய்- வருண் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2020-ம் ஆண்டு ஐபில் போட்டிகள் துபாயில் நடந்து முடிந்தன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. பல போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் டி20-க்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின்போது அளித்த சில பேட்டிகளில், தீவிரமான விஜய் ரசிகர் என்பதை வருண் வெளிப்படுத்தியிருந்தார். அவரைச் சந்திக்க ஆசை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (நவம்பர் 17) விஜய்யைச் சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வருண் சக்ரவர்த்தி.

விஜய் புகைப்படத்துடன் வருண் சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், “உள்ளே வந்தா பவரடி.. அண்ணா யாரு? தளபதி” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #VarunChakravarthy என்ற பெயரும் ட்ரெண்டாகி வருகிறது.

‘மாஸ்டர்’ டீஸரின் இறுதியில் விஜய்விஜய் சேதுபதி இருவரின் கைகளும் மோதுவது போன்று முடியும். அதேபோன்று விஜய்வருண் சக்ரவர்த்தி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.thanks