பாரம்பரியத்தை தேடுவீர்! – Search Traditional

463

பாரம்பரியத்தை தேடுவீர்!

11 நவ, 2020 – 06:45 IST

எழுத்தின் அளவு:


Search-Traditional

கணேஷ்பாபு இயக்கி நாயகனாக நடிக்கும், கட்டில் படம், வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.படம் குறித்து, கணேஷ்பாபு கூறியதாவது:பல தலைமுறைகளை கடந்த ஒரு வீட்டில், கட்டில் ஒன்று பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. அதைச்சுற்றி நடக்கும் கதையே இப்படம். முதலில் நான், நாயகனாக நடிக்க வேண்டும் என நினைக்கவில்லை. பல நடிகர்களிடம், ‘கால்ஷீட்’ கேட்டபோது, சரியாக அமையவில்லை. இறுதியில் நானே நடிகனானேன்.தாத்தா, தந்தை, மகன் என, மூன்று வேடங்களில் நடிப்பதால், காலமும் அதிகம் தேவைப்பட்டது. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பின், புதிய ஸ்ரீகாந்த் தேவாவை பார்க்கலாம். எனக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். படம், தியேட்டரில் தான் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.thanks