நடிகை ஶ்ரீதிவ்யா, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக இணைந்தார் !

660

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் Positive Print Studios LLP நிறுவனம் இரண்டாவது முறையாக கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படம் முழுமையான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. தற்போது இப்படத்தில் நடிகை ஶ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க இணைந்திருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…

இப்படம் திரில்லர் கலந்த ஆக்சன் படம் என்றாலும் படத்தின் நாயகி கதாப்பாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கதாப்பாத்திரம் ஆகும். திரைக்கதை முழுதாக எழுதி முடித்தவுடன் நாயகி கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஶ்ரீதிவ்யா பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். இப்படத்தில் அவர் பிஸியோதெரெப்பிஸ்ட்டாக நடிக்கிறார்.

தற்போதைய நிலையில் “தயாரிப்பு எண் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை Positive Print Studios LLP நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்பட்டு, குறுகிய காலத்தில் படத்தின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் Positive Print Studios LLP நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ப்ளான் பண்ணி பண்ணனும்” படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.