கமலின் `விக்ரம்’ டீஸர் ஷூட் எங்கே நடந்தது, அங்கே என்ன நடந்தது?! #Vikram #KamalHaasan232

424

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘கைதி’ ரிலீஸுக்கு முன்பாகவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசனை இயக்குவதற்கான ஒப்பந்தம் போட்டுவிட்டார். ஆனால், ‘கைதி’ பட ரிலீஸுக்குப்பிறகு ரஜினி, லோகேஷை அழைத்துப்பாராட்ட, அப்போது “கமல்ஹாசனுடன் ஒரு படம் செய்யப்போகிறேன்” என லோகேஷ் சொல்ல, அந்தக் கதையைக் கேட்டிருக்கிறார் ரஜினி. உடனே “இந்தப் படத்தை நானே ராஜ்கமல் ஃபிலிம்ஸுக்கு செய்து தருகிறேன்” என உற்சாகமாகி நாக்பூரில் ‘இந்தியன் -2’ ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசனுக்கு போன் அடித்திருக்கிறார் ரஜினி. உடனடியாக கமல்ஹாசனும் ஓகே சொல்ல, ரஜினிக்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை செய்தார் லோகேஷ். இந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக திரையுலக சூழல் மொத்தமும் தலைகீழாக மாற, ரஜினி தயங்க, மீண்டும் கமல்ஹாசனிடமே லோகேஷின் கதை போனது.

பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டிலை வெறும் போஸ்டராக அறிவிக்கலாம் என்கிற பேச்சுவந்தபோது, லோகேஷ் கனகராஜ்தான் இப்படி ஒரு வீடியோ டீஸர் ஐடியா இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். உடனடியாக ஐடியாவில் இம்ப்ரஸ் ஆன கமல், அதற்கான வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார். ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டிருக்கிறது. இந்த டீசருக்குத் தேவையான புத்தகங்களை எல்லாம் லோகேஷ் எடுத்துவர, தன்னுடைய கலெக்‌ஷனில் இருந்து சில துப்பாக்கிகளைக் கொடுத்திருக்கிறார் கமல்.

thanks