அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்… இணையத்தை தெறிக்க வைக்கும் மாஸ்டர் டீசர்

506


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி வெளியான மாஸ்டர் டீசர் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் மாஸ், கிளாஸ், ஆக்சன் என அனைத்தும் கலந்து இந்த டிசர் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய்

இந்த டீசரில், கேடி ஸ்டூடண்ட் இல்லமா புரபசர், அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்… என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

thanks