அசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே

439

‘ஓ மை கடவுளே’ என்பது சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான வாசகம். வெற்றிப்படமொன்றின் பாடலுக்கு இடையே வரும் இந்த வசனம் இப்போதும் பல சந்தர்பங்களிலும், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஓ மை கடவுளே என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
அழகு நாயகன் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நாளைய இயக்குநர் போட்டியின் இறுதிச் சுற்றுவரை வந்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. அசோக் செல்வனும் அபிநயா செல்வமும் இணைந்து துவக்கியிருக்கும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ், இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி ஜி.டில்லிபாபுவுடன் சேர்ந்து தயாரிக்கிறது.
மணமக்கள் கோலத்தில் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் சாதரண கண்ணாடி டம்ளரில் டீ சாப்பிடுவதுபோல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே, ரசிகர்களிடம் படம் குறித்த ஆர்வத்தை பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளர் அபிநயா செல்வம் கூறும்போது, “ஓரு கனவு நிறைவேறும் மகத்தான தருணமாக இதை நான் உணர்கிறேன். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் போன்ற வெற்றிப் படங்களுக்கு தூணாக துணை நின்ற, ஆக்ஸஸ் பிலிம்ஸ் டில்லிபாபு சார், எங்களது கனவு நனவாக ஆதார சக்தியாக அமைந்திருப்பதை பெருமையுடனும் பெருமகிழ்வுடனும் பகிர்ந்து கொள்கிறோம். அவர் இந்தப் படத்தில் பங்கு கொண்டிருப்பது எங்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறது.
காதல் எப்படி சாகாவரம் பெற்றதோ அதுபோல், காதல் கலந்த நகைச்சுவைப் படங்கள் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் படங்களாகத்தான் இருக்கும். ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பாரத்துவிட்டு திரையலகைச் சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தன் முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் மிக அழகாக செதுக்கி தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார் அபிநயா செல்வம்.
‘மேயாத மான்’ மற்றும் ‘எல்.கே.ஜி.’ படங்களுக்கு ஓளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றிய விது  அய்யன்னா ‘ஓ மை கடவுளே’ படத்துக்கு ஓளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.