செக்கச் சிவந்த வானம் முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?

3
மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்‘.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்ததாலும் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வரும் ஆக்‌‌ஷன் படம் என்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு உண்டானது. படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் 3 நாட்களாக திரையரங்குகள் நிரம்பி வருகின்றன.
‘செக்கச்சிவந்த வானம்’ படம் முதல் நாளே 8.05 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. படத்தின் வெற்றி தொடர்வதால் அடுத்தடுத்து வருவதற்கு திட்டமிட்டிருந்த படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here