கேரளாவிற்கு வந்த வெள்ள நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்வு

0
8

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 14 பேர் காணாமல்போய் உள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.

இதற்காக மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. பேரழிவின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு அளிக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நேற்று முன்தினம் வரை ரூ.730 கோடி கிடைத்திருந்தது. இதுதவிர நிலமாகவும், நகைகளாகவும் நிவாரண நிதிக்கு கிடைத்தது.

இந்நிலையில் கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeralaFloods #KeralaReliefFund

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here