வாகனங்களில் கொடியை நிரந்தரமாக பயன்படுத்த கூடாது – மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் புதிய உத்தரவு

0
6

சென்னை:ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது மன்ற அமைப்பை வலுப்படுத்துவதற்கும், அன்றாட செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்காகவும் மன்றத்தின் நிர்வாக விதிகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.

விதிகளின் விவரம் வருமாறு:-

* மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது.

* மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரசாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக்கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றிட வேண்டும். மன்றக்கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களே இருக்க வேண்டும்.

* சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.

* மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது. மன்ற கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* தீவிர குற்ற நடவடிக்கை புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்படுவார். குற்றம் நிரூபணமானால் அவர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.

* ஒழுங்கு நடவடிக்கை, பரிந்துரை மற்றும் நடவடிக்கைகள் என அனைத்திலுமே ரகசியம் காக்கப்பட வேண்டும். தலைமையின் அறிவுறுத்தல் இல்லாமல் ஊடகங்களில் இதுகுறித்து கருத்து சொல்லக்கூடாது.

* ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்போ அல்லது பதவியோ வழங்கப்படும்.

* தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

* மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.

* தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.

* தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொதுமக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.

* தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

* சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

* சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.

* மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.

இவை உள்பட பல்வேறு புதிய உத்தரவுகளை மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் பிறப்பித்து உள்ளார்.  #Rajinikanth #RajiniMakkalMandram

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here