திமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின்

0
9

சென்னை:திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை. கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கருணாநிதியில்லை… அவரை போல் எனக்குப் பேச தெரியாது.

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்… கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலின் தலைவர் ஆனது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here