ஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் – நாராயணசாமி

0
6

மு.க.ஸ்டாலினின் தலைமை திமுகவை வலுப்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக போட்டியின்றித் தேர்வாகும் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள வெள்ள நிவாரணத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் எந்தவித தடையும் கூறாமல் கேரள மக்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் வாஜ்பாய் அஸ்தியை வைத்து பாஜக அரசியல் செய்யப்பார்க்கின்றார்கள் என்று அவரது உறவினரே கண்டனம் தெரிவித்துள்ளார்கள் இது துரதிர்ஷ்டவசமானது. தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்த்தவர் அதனால் தான் என்னவோ பிரதமர் பதவிக்குப்பிறகு அவருக்கு எந்த பதவியையும் பாஜக வழங்கவில்லை, இருப்பினும் அவரது பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியவில்லை என நாராயணசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு நடத்தப்படுவதால் அவர்களது வயது வரம்பை 22 ல் இருந்து 24 ஆக உயர்த்தி எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் காவலர் தேர்வை நடத்த முடிவு செய்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பியுள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 392 ஆசிரியர் தேர்வு நடத்தப்படவுள்ளதாக நாராயணசாமி பேட்டியளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை வலுப்பெற செய்யும் என்றும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் நேசிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி, அவரது நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமீத்ஷா வருவது எவ்வித சர்ச்சையை ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here