சென்னையில் காற்று மாசு மிக அதிகம்

0
7

இந்தியாவில் காற்று மாசு மிகுந்த 14 நகரங்கள் பட்டியலில் சென்னை மிகவும் பின் தங்கி 13வது இடத்தை பிடித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 14 முக்கிய நகரங்களில் மத்திய பிரதேச மாநிலம் போபால் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு காற்று மாசின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. விஜயவாடா, சண்டிகர், லக்னோ, கொச்சி ஆகியவை அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் தலைநகர் டெல்லி மிக அதிக காற்று மாசுடன் இப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை இதற்கு முந்தைய இடத்திற்கு அதாவது 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிற நகரங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது குறைவாக இருப்பதே காற்று மாசு அதிகமாக இருக்க காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here