மேலணையில் புதிதாக 2 கதவணைகள் கட்டப்படும்: முதல்வர்

0
9

திருச்சி: திருச்சியில் மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் பேசுகையில்;
மேலணையில் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் பணி முடிந்து விடும். 182 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணை கட்டப்பட்டது. 1924, 1977 , 2013 ஆண்டுகளில் வெள்ளம் வந்த போது உபரி நீர் வெளியேறியது. தற்போது தொடர்ந்து 8 நாட்களாக உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக மதகுகள் வழியாக தொடர்ந்து வந்ததால் உடைந்து விட்டது. புதிய அணை கட்டப்படும். புதிய அணைக்கு மொத்தம் 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்படும். கொள்ளிடத்தின் வடக்கு பகுதியில் அய்யன் கால்வாயில் ரூ.85 கோடியில் மேலும் அணையும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் நேற்று முன்தினம் இரவும், 9வது மதகு நேற்று காலையும் உடைந்தன. உடைந்த மதகுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி காலை 8.45 மணியளவில் திருச்சி சென்றடைந்தார். முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் சென்று அணையில் உடைந்த மதகுகளை பார்வையிட்டனர்.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3,032 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,406 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here